Price: ₹50.00
(as of Jul 22, 2021 00:06:28 UTC – Details)
‘உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு சொல்வதற்கென என்ன சேதி வைத்துள்ளீர்கள்?’ என்ற கேள்வியை யாரேனும் உங்களிடம் கேள்வியை எழுப்பினால் பதில் வைத்துள்ளீர்களா?
நாம் ஒவ்வொருமே பிறரிடம் சொல்வதற்கென செய்திகள் நிறைய வைத்திருப்போம். எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் வாரி இரைத்துவிட்டால் தேவையானதை தேவையான நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகளோ விஷயங்களோ இருக்காது. அதனால்தான் சிலரைப் பார்த்தால் சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். காரணம் அவர்கள் அவசியம் இல்லாதபோதும் தேவையே இல்லாத விஷயங்களை கொட்டித் தீர்த்திருப்பார்கள். அவர்களிடம் உள்ள விஷயங்கள் நீர்த்துப் போயிருக்கும்.
உங்கள் ‘சொல்’ மதிக்கப்பட வேண்டுமானால் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும். சதா சொல்லிக்கொண்டிருந்தால் உங்கள் ‘சொல்’ செல்லா காசாகிவிடும். கேட்பதற்கு காதுகள் இருக்காது. உள்வாங்கிக்கொள்ள மனதும் இருக்காது.
இந்த நூலில் ‘கமலி From நடுக்காவேரி’ என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி குறித்து எழுதி உள்ளேன். ஒரு பேராசிரியர் தன்னுடைய மாணவிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும்போது அவளுக்கு ஒரு கப் டீயை குடிக்கக் கொடுத்துவிட்டு அந்த கப்பை வைத்தே படிப்பதற்கான ஒரு லாஜிக்கைக் கற்றுக்கொடுக்கிறார்.
‘நீ டீ குடிப்பதற்கு எப்படி ஒரு கப் தேவையாக இருக்கிறதோ அதுபோல படிப்பதற்கும் ஒரு CUP தேவை. அதாவது Concentrate, Understand, Practice என்பதே அந்த லாஜிக்’ என அறிவுரை சொல்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஒரு கருத்தை எடுத்துச் சொல்வது என்பது ஒரு கலை. இதை அடிப்படையாக வைத்தே ‘சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்!’ என்று இந்த நூலுக்குப் பெயரிட்டேன்.
இதுபோல வாழ்வியல், தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், குழந்தை வளர்ப்பு, தொழில்நுட்பம் என ஏராளமான தகவல்களுடன் காம்கேரின் OTP வரிசை நூல்கள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன.
படித்துப் பயன்பெறுங்கள். விருப்பமானவர்களுக்குப் பரிசளித்து மகிழுங்கள். வாழ்த்துகள்!
– காம்கேர் கே.புவனேஸ்வரி